இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.... பீதியில் உறைந்த மக்கள்..!

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.... பீதியில் உறைந்த மக்கள்..!



terrible-earthquake-in-indonesia-people-frozen-in-panic

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து  தரைமட்டமாகி, பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேஷியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சியாஞ்சூர் நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை உட்பட 100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகியதில் நூற்றுக்கணக்கான மக்கள் இடுப்பாடுகளில் சிக்கினர். இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவாகியுள்ளது. பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் நகரமே குலுங்கி ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

earthquake

 இந்த இடிபாடுகளில் சிக்கி 162 பேர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 700 க்கு அதிகமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இடுப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பணிகள் விடிய விடிய நடந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று காலை இடிபாடுகளில் இருந்து மேலும் 90 பேர் மீட்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. மேலும் உயிர் பலி எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.