இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்... மரண பீதியில் மக்கள்..!

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்... மரண பீதியில் மக்கள்..!


terrible-earthquake-in-indonesia-leaves-people-in-morta

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து தாக்கிய இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இந்தோனேஷியாவில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது.

மேற்கு இந்தோனேஷியாவின் கடற்கரையில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சுமத்ராவின் பெங்குலு  நகருக்கு தென்மேற்கில் 155 கிலோ மீட்டர் தொலைவில் எங்கானோ என்ற சிறிய தீவுக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

indonesia

இதனைத் தொடர்ந்து இரவு 8 மணி முதல் 9 மணிக்கு இடையே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 மற்றும் 5.4 ஆக இரு முறை பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தவித தகவலையும் அந்நாட்டு அரசு வெளியிடாமல் உள்ளது.