புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அதிர்ச்சி! பெண்ணின் மண்டை ஓட்டிற்குள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்! என்ன இருந்தது தெரியுமா?
மருத்துவ துறையில் சில நேரங்களில் சில விசித்திரமான விஷயங்களை நாம் கேள்விப்படுவது வழக்கம். அதுபோன்ற ஒரு விசித்திரமான சம்பவம்தான் இது. நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்ம் 41 வயது ராச்சல் பால்மா. நீண்ட நாட்களாக தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார் பால்மா.
மேலும், தனக்கு விசித்திரமான கற்பனைகள் தோன்றி மறைவதாகவும், கைகள் மிகவும் நடுக்கம் ஏற்படுகிறது, ஒரு காபி குவளையை கூட தன்னால் தூக்க முடியவில்லை என்றும், யாருக்கும் மெஸேஜ் கூட செய்யமுடியவில்லை என்றும் தனது புகாரில் கூறியிருந்தார் பால்மா.
அதுமட்டும் இல்லாமல், செய்யும் வேளையில் குழப்பம், அதிக மறதி இதுபோன்று பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவந்த பால்மா மறுவர்களை அணுகினார். பால்மாவின் தலையை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் புற்று நோய் கட்டியாக இருக்கலாம், எனவே மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று வலியுருத்தினர்.
மிக ஆபத்தான முடிவை ஏற்றுக்கொண்டு அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டார் பால்மா. அறுவை சிகிச்சையும் நடந்தது. மூளையில் இருப்பது புற்று நோய் கட்டி என நினைத்த மறவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அங்கு இருந்தது கட்டியல்ல நாடாபுழு. மருத்துவ துறையில் மிகவும் அரிதான இந்த ஒருநிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அறுவை சிகிச்சைக்குப் பின் பால்மா நலமாக உள்ளார். அதிலும் நாடா புழு உயிரோடு இருந்துள்ளது அதிர்ச்சியை அதிகமாக்கியுள்ளது.