அமெரிக்காவில் தலைதூக்கிய தமிழ் மொழி!! அதிகரித்து வரும் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை!!



Tamil speaking increased in america

அமெரிக்காவில் தி அமெரிக்கன் கம்யூனிட்டி சர்வே என்ற ஆய்வறிக்கையின் மூலம் இந்தாண்டு அதிக வெளிநாட்டு மொழிகள் பேசுபவர்கள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு காரணம் அதிவேகமாக வளர்ந்து வரும் தமிழ் மொழி தான். 

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தமிழ் மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் 60 சதவிகிதம் வளர்ந்துள்ளது.  அமெரிக்காவில் வசிக்கும் 30.5 கோடி பேரில் 6.7 கோடி பேர் வெளிநாட்டு மொழிகள் பேசுபவர்களாக உள்ளனர். இதில் 4.20 லட்சம் மக்கள் தமிழ் பேசுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. 

Tamil people in America

இந்திய மொழிகளில் இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 8.63 லட்சமாகவும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 4.34 லட்சமாகவும், தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 4.15 லட்சமாகவும் உள்ளது. தெலுங்கு பேசுவோரின் எண்ணிக்கை 86 சதவீதமும், இந்தி பேசுவோரின் எண்ணிக்கை 42 சதவீதமும், குஜராத்தி பேசுவோரின் எண்ணிக்கை 22 சதவீதமும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வளர்ச்சியில் தமிழ் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மேலும் இந்திய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கையில் தமிழ் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும்.