கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
கனடா 2022 தேர்தலில் வேட்பாளராக களமிறங்கும் தமிழ் பெண் அனிதா ஆனந்தராஜன்.!

கனடாவில் நடைபெறவுள்ள 2022 மாகாணசபை தேர்தலில், தமிழ் பெண் வேட்பாளராக அனிதா ஆனந்தராஜன் என்பவர் களமிறங்கவுள்ளார். ஸ்காபுரோ வடக்கு தொகுதியில், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அனிதா ஆனந்தராஜன் கனடாவில் உள்ள ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார். மேலும், 7 வருடம் மனிதவள மேம்பாட்டு துறையில் பணியாற்றவும் செய்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பை கடந்த நவ. 28 ஆம் தேதி ஒண்டாரியோ லிபரல் கட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அனிதா ஆனந்தராஜன் தெரிவிக்கையில், "ஸ்காபரோ நார்த் குடியிருப்பு மக்களின் சமத்துவத்தை பாதுகாத்து உறுதி செய்ய நான் உறுதியேற்கிறேன்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்பு ஆகியவற்றை உணர்ந்து செயல்படுவேன். பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலை உயர்த்தி கேள்வி கேட்கவும், நலிந்த மக்களின் உயர்வுக்காகவும் பொருளாதார திட்டங்களை ஏற்படுத்துவேன். எனது வெற்றிக்கு பின்னர் பொருளாதாரம் மற்றும் மீட்டெடுப்பு செயல்கள் துரிதப்படும். இனவெறியை கட்டாயம் அகற்றுவேன்" என்று தெரிவித்தார்.