உலகம்

இலங்கையில் பெரும் பதற்றம்.. அரசுக்கு ஆதரவாளர்கள் வீடுகள் தீக்கிரை..!

Summary:

இலங்கையில் பெரும் பதற்றம்.. அரசுக்கு ஆதரவாளர்கள் வீடுகள் தீக்கிரை..!

இலங்கையில் அதிகரித்து வந்த பொருளாதார பிரச்சனை காரணமாக, அந்நாடு திவாலாகும் நிலைமையில் உள்ளது. இதனால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும், அரசுக்கு ஆதரவானோர், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இதனால் அந்நாட்டின் தலைநகர் கொழும்புவில் கலவர சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ போராட்டக்குழுவால் அடித்தே கொல்லப்பட்டார். சிங்களர்களும் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளதால், ராஜபக்சே குடும்பத்தோடு வெளிநாடு தப்பி செல்ல திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில், இலங்கை அரசின் பதவிலகிய ஆளும் கட்சி முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்திற்கு சொந்தமான வீட்டினை அரசு எதிர்ப்பு போராட்டக்குழு தீக்கு இரையாக்கியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement