உலகம்

கொரோனா எதிரொலி: ஒரு வேளை உணவுக்காக 2 மைல்களுக்கு மேல் காத்திருந்த மக்கள்.! வீடியோ உள்ளே.

Summary:

South africa people queue for food upto 2.5 miles

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. எனவே இந்நோயிலிருந்து மக்களை காப்பாற்ற உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவித்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் அதிகப்படியாக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டு மக்கள் வருமானமின்றி தவித்து வருகின்றனர். ஒரு வேளை உணவுக்காக வெயிலில் கிட்டத்தட்ட 2 மைல்களுக்கு மேல் மக்கள் வரிசையில் காத்திருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.


Advertisement