ஆத்தாடி.. பாம்பு சீறி பார்த்துருப்பீங்க.. சிரிச்சு பார்த்திருக்கீங்களா! வைரலாகும் அரிய வீடியோ!!
சமூக வலைத்தளத்தில் பாம்பு சிரிப்பது போன்று இருக்கும் வீடியோ ஒன்று பெருமளவில் வைரலாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
பாம்புகள் என்றாலே பெரும் படையும் அஞ்சும் என்பர். எவ்வளவு பெரிய வீரர்களாக, தைரியசாலிகளாக இருந்தாலும் சிறிய பாம்பை கண்டால் அவர்களுக்கு நடுக்கம் ஏற்படதான் செய்கிறது. அப்படி இருந்தும் வினோதமான சில மக்கள் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளை வளர்ப்பது, அதனைப் பிடிப்பது போன்ற வித்தியாசமான செயல்களால் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.
மேலும் பாம்புகள் குறித்த ஆச்சரியப்பட வைக்கும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல வீடியோக்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகும். இந்த நிலையில் தற்போது சிறிய பாம்பின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
அந்த வீடியோவில், அலமாரியில் சிறிய பாம்பு ஒன்று உள்ளது. பொதுவாக பார்க்கும் போது பாம்புகள் சீறிக்கொண்டு அச்சமூட்டும் வகையில் இருக்கும். ஆனால் அந்தப் பாம்பு பக்கத்தில் சென்று பார்த்தபோது மிகவும் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்துள்ளது. மேலும் அது சிரிப்பது போலவும் தெரிகிறது. இந்த வீடியோ பல்வேறு வலைதளங்களில் பகிரப்பட்டு பெருமளவில் வைரலாகி வருகிறது.