பார்க்கவே புல்லரிக்குது.. வைக்கோல் போரில் 25 கிலோ எடையுடைய ராட்சத மலைப்பாம்பு! முட்டையில் இருந்து வந்த 21 குட்டி பாம்புகள்! வைரலாகும் பகீர் வீடியோ....



snake-rescue-hatchlings-born-chhattisgarh

சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தின் நான்சியா கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மலைப்பாம்பு ஒன்றின் மீட்பும், அதனுடன் இருந்த முட்டைகளிலிருந்து குட்டிகள் வெளியே வந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஜூன் 27ம் தேதி காலை, நான்சியா கிராமத்தில் பெரிய பாம்பு ஒன்று காணப்பட்டது தொடர்பாக ராய்கர் விலங்கு சேவை குழுவிற்கு தகவல் அறிவித்தனர்.. தர்மேந்திர சிங் ராஜ்புத் தலைமையிலான வனஉதவிக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஒரு வீட்டின் வைக்கோலுக்குள் 12 அடி நீளமுள்ள மற்றும் 25 கிலோ எடையுடைய மலைப்பாம்பு இருப்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் துன்பகரமான சூழ்நிலையை எதிர்கொண்டபோதிலும், குழுவினர் அந்த மலைப்பாம்பை பாதுகாப்பாக மீட்டு அருகிலுள்ள ஒரு ஆற்றில் விடுவித்து சிறப்பான பணியாற்றினர். மீட்பு பணியின் போது அவர்கள் கண்டுபிடித்த 21 பாம்பு முட்டைகள், பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு குழுவினரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டன.

இதையும் படிங்க: Video : கம்ப்யூட்டரில் ஒரு கை, பெண் மீது இன்னொரு கை! பணி நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறிய வங்கி ஊழியர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

சில நாட்களில் அந்த முட்டைகளிலிருந்து பாம்பு குட்டிகள் வெற்றிகரமாக வெளியே வந்தன. இதனால் வனத்துறை அதிகாரிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிறந்த குட்டி மலைப்பாம்புகள் அனைத்தும் தற்போது காட்டில் விடப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பு

இந்த நிகழ்வு மூலம் ராய்கர் விலங்கு சேவை குழு, காட்டுயிர் பாதுகாப்பில் தங்கள் பங்களிப்பை மிகவும் அருமையாக காட்டியுள்ளனர். இவ்வகை சேவைகள் பாராட்டப்பட வேண்டியவை என்றும், இயற்கை பாதுகாப்பில் மக்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

 

இதையும் படிங்க: இனி பள்ளி மாணவிகள் கர்ப்பமானால் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை கிடைக்கும்! அரசு அதிரடி அறிவிப்பு! எந்த நாட்டில் தெரியுமா?