
Snake leopard
கென்யா நாட்டில் உள்ள வனப்பகுதி ஒன்றில் ராட்ச மலைப்பாம்பு மற்றும் சிறுத்தை இரண்டும் கடுமையாக சண்டை போட்டு கொள்ளும் காட்சியை வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஒருவர் தத்துரூபமாக புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
கென்யாவில் உள்ள வனப்பகுதி ஒன்றிற்கு வனவிலங்குகளை புகைப்படம் எடுப்பதற்கு வனவிலங்கு புகைப்பட கலைஞர் மைக் வெல்டன் என்ற 28 வயது இளைஞர் ஒருவர் சென்றுள்ளார்.
அப்போது அவர் கண்ட காட்சியை அருமையாக புகைப்படம் எடுத்துள்ளார். அதாவது பசியில் உள்ள மலைப்பாம்பிடம் தனிமையில் வந்த சிறுத்தை மாட்டி கொள்கிறது. அப்போது இரண்டும் விடாமல் சண்டை போட்டு கொள்வதை மைக் கண்டுள்ளார்.
அப்போது அவரது கேமராவில் தத்ரூபமாக புகைப்படம் எடுத்துள்ளார். அதில் சிறுத்தை முதலில் தன் காலால் பாம்பை அமுக்கி உள்ளது. உடனே நொடி பொழுதில் மலைப்பாம்பு சிறுத்தை சுற்றி கொண்டுள்ளாதாக அவர் கண்ட காட்சியை கூறியுள்ளார் மைக். மேலும் இந்த சண்டையில் கடைசியில் வென்றது மலைப்பாம்பு எனவும் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement