20 வருடங்களாக ஹோமாவிலிருந்த சவுதியின் தூங்கும் இளவரசர் காலமானார்!



sleeping-prince-saudi-death-news

சவுதி அரேபியா மற்றும் அரபு நாடுகள் முழுவதும் தூங்கும் இளவரசர் என்ற பெயரில் அறியப்பட்ட அல் வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், 35 வயதான இவர் நீண்ட காலமாக ஹோமா நிலையில் இருந்த நிலையில் மரணமடைந்தார். 

2005ஆம் ஆண்டு, 15 வயதில் கார் விபத்தில் சிக்கிய அவர், பின்னர் ஹோமா நிலைக்குச் சென்றார். கடந்த 20 வருடங்களாக அவர் எந்த உணர்வும் இன்றி மருத்துவமனையில் வாழ்க்கையை தொடர்ந்தார். அவரது தந்தை, மகனை மீட்டெடுப்பதற்காக அன்போடு ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடினார், மகனுக்கான நம்பிக்கையை இழக்கவில்லை.

இப்போது அவரது மரணம், சவுதி அரேபியா மற்றும் பிற அரபு உலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மற்றும் அரசியல், பிரபலங்கள் உலகத்தில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தொழிலதிபரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்! செல்ல பிராணியின் நன்றி கடனுக்காக வாழ்க்கையை மாற்றிய நபர்! அதுவும் எப்படின்னு பாருங்க! நெகிழ்ச்சி சம்பவம்...

 

இதையும் படிங்க: நாகப்பாம்புகளுக்கு உண்மையில் நாகமணிகள் இருக்கிறதா? பாரம்பரிய நம்பிக்கை! உண்மையான விளக்கம் இதோ..