அடச்சீ.. கருமம்! பிரபல வணிக வளாகத்தில் மலம் கழித்த நபர்! மீண்டும் இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ!
உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான சிங்கப்பூரில் நடந்த ஒரு அநாகரீக சம்பவம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பொது இடங்களில் கடும் ஒழுங்கு விதிகள் பின்பற்றப்படும் இந்த நாட்டில் நடந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மெரினா பே சாண்ட்ஸ் வளாகத்தில் நடந்த சம்பவம்
சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் வணிக வளாகத்தின் மொட்டை மாடியில், ஒரு நபர் பகிரங்கமாக மலம் கழிக்கும் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படம் முதன்முறையாக 2023 நவம்பர் மாதத்தில் வெளியான நிலையில், தற்போது மீண்டும் வைரல் புகைப்படமாக சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்படுகிறது.
CCTV-யில் பதிவான அநாகரீக செயல்
மாநாட்டு மையத்தின் நுழைவாயில் அருகிலுள்ள பொது இடத்தில் அந்த நபர் இச்செயலில் ஈடுபட்டது, அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவிலும், பொதுமக்கள் எடுத்த வீடியோக்களிலும் தெளிவாக பதிவாகியுள்ளது. இது சம்பவத்தின் தீவிரத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: நெடுஞ்சாலையில் அமர்ந்து சமையல் செய்த பெண்! அருகில் குழந்தையும்..... கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ!
விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக மெரினா பே சாண்ட்ஸ் நிர்வாகம் உடனடியாக விசாரணை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் காணும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. சிங்கப்பூர் சட்டப்படி பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்வது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.
சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்தை கடுமையாகப் பின்பற்றும் சிங்கப்பூரில், இது போன்ற பொது இட விதிமீறல்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க தேசிய சுற்றுச்சூழல் முகமை உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.