இதுமட்டும் நடந்தால் அடுத்து நிச்சயம் அணு ஆயுதம் தான்.! ரஷியா எச்சரிக்கை.! அதிர்ச்சியில் உலக நாடுகள்.!

இதுமட்டும் நடந்தால் அடுத்து நிச்சயம் அணு ஆயுதம் தான்.! ரஷியா எச்சரிக்கை.! அதிர்ச்சியில் உலக நாடுகள்.!


rusia talk about nuclear weapons

நேட்டோ அமைப்பில் தங்களை சேர்த்துக்கொள்ளும்படி உக்ரைன் நாடு கேட்டதை அடுத்து ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே சண்டை முற்றி தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் நடந்துவருகிறது. உக்ரைன் மீது ரஷியா இன்று 28-வது நாளாக போர் தொடுத்து வருகிறது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் - ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன.

இதற்கிடையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. மேலும், ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. இதன் காரணமாக சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷிய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ பேசுகையில், உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு எங்களுக்கு முதன்மையானது.

அணு ஆயுதம் பயன்படுத்தப்படுவதற்கான காரணங்கள் அனைத்தையும் வாசியுங்கள். ரஷியா என்ற நாடு இந்த உலகத்தில் இருக்குமா? இருக்காதா? என்ற உச்சபட்ச அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அணு ஆயுதத்தை நாங்கள் பயன்படுத்துவோம் என தெரிவித்துள்ளார்.