செஸ் போட்டியில் சிறுவனின் கையை‌ உடைத்த ரோபோ.. வைரலாகும் வீடியோ!Robo breaks boys finger

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவில் கடந்த ஜூலை 19ஆம் தேதி நடைபெற்ற செஸ் போட்டி ஒன்றில் ரோபோ ஒன்று சிறுவனின் விரல்களை உடைத்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

30 சிறுவர்கள் கலந்துகொண்ட இந்த ஓபன்‌ செஸ் போட்டியில் கிறிஸ்டோபர் என்ற 7 வயது சிறுவனும் கலந்துகொண்டான். ரோபோவுடனான ஒரு போட்டியில் அந்த சிறுவன் விளையாடியுள்ளான்.

அந்த சம்பவத்தின் போது ரோபோ தன்னுடைய காய்களை நகர்த்தி முடிப்பதற்குள் சிறுவன் விளையாட துவங்கியதால் எதிர்பாராதவிதமாக சிறுவனின் விரலை ரோபோ இறுக்கியுள்ளது.

உடனே அருகில் இருந்தவர்கள் போராடி அந்த சிறுவனை ரோபோவிடம் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் மருத்துவர் பரிசோதித்ததில் அந்த சிறுவனின் ஒரு விரல் முறிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தினால் ரோபோக்களின் மீதான பயம் அதிகரித்துள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.