உலகம்

அமெரிக்காவில் போலீசார் சுட்டதில் கருப்பின வாலிபர் பலி! பற்றி எரியும் போராட்டம்!

Summary:

police killed black man in USA


அமெரிக்காவில் மின்னபோலிஸ் நகரில் மே 25ஆம் தேதியன்று ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பின நபரை போலீஸ் அதிகாரி டெரக் சவின் தனது முழங்காலை வைத்து நெரித்துக் கொன்ற வீடியோ வெளியாகி ஏறக்குறைய கடந்த மூன்று வாரங்களாக அமெரிக்காவில் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உணவகத்தின் வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்து இருக்கிறார் என நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.  இதனால் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் ரேஷார்ட் புரூக்ஸ் என்ற அந்த 27 வயது வாலிபரை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

ஆனால் அவர் வர மறுத்ததுடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார்.  இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டார்.  இதுபற்றிய வீடியோவும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.  இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

இந்த செய்தி வெளியானதும் அந்த நாட்டில் போராட்டம் மேலும் சூடுபிடித்தது. அவர் கைதுசெய்யப்பட்ட உணவகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பாகவே உணவகம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
 


Advertisement