ஹலோ.. உங்க மொபைல கொஞ்சம் தர்றீங்களா..! நம்பி கொடுத்த பெண்ணிற்கு சில நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி..
ஹலோ.. உங்க மொபைல கொஞ்சம் தர்றீங்களா..! நம்பி கொடுத்த பெண்ணிற்கு சில நாட்களில் காத்திருந்த அதிர்ச்சி..

வங்கிக்கு வரும் பெண்களின் ஆபாச படங்களை திருடி மிரட்டி வந்த வங்கி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவில் ஹாரிஸ் கவுண்டியை சேர்ந்தவர் ஜுயன் எஸ்டீபன். 27 வயதாகும் இவர் அங்குள்ள வங்கி ஒன்றில் கிளெர்க் வேலை பார்த்துவந்துள்ளார். இன்னிலையில் ஜுயன் எஸ்டீபன் வேலை பார்த்துவரும் வங்கிக்கு வரும் பெண்களிடம், வங்கி கணக்கு தொடர்பான தகவல்களை உங்கள் தொலைபேசியில் பார்க்கவேண்டும் என கூறி ஜுயன் எஸ்டீபன் பெண்களின் போன்களை வாங்கி வந்துள்ளார்.
பின்னர் பெண்களிடம் இருந்து தான் வாங்கிய தொலைபேசியில் அவர்களின் ஆபாச புகைப்படம் ஏதேனும் உள்ளதா என சோதனையிட்டு, அதில் அவர்களின் படங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை எடுத்துவைத்துக்கொண்டு போனை அவர்களிடம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார் ஜுயன் எஸ்டீபன்.
இந்நிலையில் வழக்கம்போல் பெண் ஒருவர் வங்கிக்கு செல்ல, அவரது போனை வாங்கிய ஜுயன் எஸ்டீபன், அந்த பெண்ணின் தொலைபேசியில் இருந்த ஆபாச படங்களை எடுத்துவைத்து, பின்னர் அந்த படங்களை அந்த பெண்ணிற்கு அனுப்பி அவரை மிரட்டியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, போலீசார் ஜுயன் எஸ்டீபனை கைது செய்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் இதே போன்று பல்வேறு இளம் பெண்களின் ஆபாச புகைப்படங்களை எடுத்து வைத்திருந்ததும், அவர்களை மிரட்டி வந்ததும் தெரியவந்துள்ளது.