உலகம் டெக்னாலஜி

2 மில்லியன் ஆண்டுகளாக மழையே பெய்யாத இடம் ஒன்று உள்ளது; எந்த இடம் தெரியுமா?

Summary:

place with no rain for 2 million years

ஆறு மாதத்திற்கு ஒரு முறை மழை பெய்யவில்லை என்றாலே நம்முடைய நிலங்கள் வறண்டு மக்கள் வறட்சியில் வாடும் நிலை உண்டாகிவிடும். மழைக்காக நம் மக்கள் அவரவர் தெய்வங்களிடம் மன்றாட துவங்கிவிடுவர்.

ஆனால் நாம் வாழும் பூமியில் 2 மில்லியன் ஆண்டுகளாக மழையே பெய்யாத ஓர் இடம் உள்ளது. அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்ள பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன.

அண்டார்டிகாவில் உள்ள மக்முர்டோ வறண்ட நிலம்தான் 2 மில்லியன் ஆண்டுகளாக மழையே பெய்யாத அந்த இடம். 4500 கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட இந்த பகுதியில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகளை பனிபாறைகளை எதுவுமே இல்லை. ஆனால் இந்தப் பகுதியில் விதா ஏரி, வந்தா ஏரி, பொனே ஏரி, ஒனிக்ஸ் ஆறு என பல நீர் ஆதாரங்கள் உள்ளன.

இங்கு மழை பெய்யாமல் இருப்பதற்கு காரணம் அந்த இடத்தை சுற்றி உள்ள உயர்ந்த மலைப் பகுதிகளில் இருந்து வீசும் மிகவும் அடர்த்தியான ஈரப்பதமுள்ள காற்று தான். இந்த காற்றானது புவியீர்ப்பு விசையால் விரைவாக உள்வாங்கி கொள்ளப்படுகிறது.

dry valley antarctica க்கான பட முடிவு

இங்கு உள்ள ஏரிகள் மற்றும் ஆறுகளில் மூன்று முதல் ஐந்து சென்டி மீட்டர் வரையிலான பனிக்கட்டிகள் சூழ்ந்து காணப்படுகின்றன. பணியிலிருந்து பல்வேறு உடல் படிமங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இங்கு கிடைக்கும் நீரானது கடல் பகுதியில் இருக்கும் நீரின் உப்புத்தன்மையை விட 3 மடங்கு அதிகமானது என்றும் கூறுகின்றனர்.


Advertisement