உலகம்

2021-இல் கூகுளில் அதிகம் தேடப்பட்டது என்ன தெரியுமா?..!

Summary:

2021-இல் கூகுளில் அதிகம் தேடப்பட்டது என்ன தெரியுமா?..!

கொரோனாவினால் ஏற்பட்ட மன அழுத்தத்தை குறைக்க, இணையவாசிகள் நடப்பு 2021 வருடத்தில் How to Heal என்பதை அதிகளவில் தேடியுள்ளனர் என கூகிள் தெரிவித்துள்ளது.

நமக்கு தெரியாத எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள, அதுகுறித்த தகவலை அறிய கூகுளை உபயோகம் செய்து வருகிறோம். அந்த வகையில், கடந்த 2021 ஆம் வருடத்திற்கு விடைகொடுத்து, 2022 ஆம் வருடத்தை நாம் வரவேற்க தயாராகிவிட்டோம். இந்த வருடமாவது கொரோனா என்ற பாதிப்பு குறைந்து, வாழ்க்கையை நல்ல நிலையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பலரின் எண்ணமாகிவிட்டது. 

கூகுள் தளத்தில் 2021 இல் அதிகளவு தேடப்பட்ட வீடியோ குறித்த தகவலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2021 ஆம் வருடத்தில் பெரும்பாலும் இணையவாசிகள் "How to Heal" என்பதை தேடியுள்ளனர். ஏனெனில், ஊரடங்கின் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்த மக்கள், கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

உலகளவில் உள்ள மக்கள் ஊரடங்கினால் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் பக்கத்து தெருவில் இருந்தும் பார்க்க முடியாமல் தவித்தனர். வெளிநாடுகள் மற்றும் வெளியூரில் பணியாற்றி வரும் நபர்கள் நெடுங்காலம் கழித்து தாயகம் வந்து குடும்பத்தினரை சந்தித்தனர். இடைப்பட்ட காலங்களில் வீடுகளுக்குள்ளேயே ஊரடங்கினால் முடங்கிப்போன மக்கள், மனஅழுத்தத்தில் இருந்து வெளியே வர How to Heal என்று தேடியுள்ளனர்.


Advertisement