உலகம்

விடியும் முன்னே மருந்துக்கடை வாசலில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள்! வெளியான பகீர் காரணம்!

Summary:

people waiting in medical shop at america

அமெரிக்கா  இல்லினாயிஸ் மாகாணத்தில் வருடத்தின் முதல் நாளே  லாபகரமான தொடக்கமாக உள்ளது. அதாவது ஜனவரி 1 முதல் சட்டப்படி மருந்தகத்தில் கஞ்சா விற்பதற்கு அம்மாகாண ஆளுநர் ஜேபி பிரிட்ஸ்கர் அனுமதி வழங்கியுள்ளார். இல்லினாயிஸ் போதைப்பொருளை சட்டபூர்வமாக்க 11 ஆவது மாநிலமாகும்.

மேலும் இல்லினாயிஸ்மாகாணத்தில் குடியிருப்பாளர்கள் சட்டபூர்வமாக 30 கிராம் அல்லது அதற்கு குறைவான கஞ்சாவை வாங்குவதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கஞ்சாவை வாங்குவதற்காக மக்கள் கடை திறப்பதற்கு வெகு நேரம் முன்பே கடைகள் முன் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள். இந்நிலையில் ஜனவரி 1 அன்று  37 மாநில மருந்தகங்களில் 77,128 பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இது விற்பனையில் 3.17 மில்லியனுக்கும் அதிகமாகும்.

 கஞ்சா விற்பனை சட்டப்பூர்வமாக்கப்பட்டவுடன், Forest Park என்ற இடத்தைச் சேர்ந்த Jackie Ryan என்பவர் கஞ்சா வாங்கி, முதலில் கஞ்சா வாங்கியவர் என்ற பெயரை பெற்றுள்ளார்.


Advertisement