உலகம்

தீவிரமாகும் கொரோனாவைரஸ்! சீனாவில் இருக்கும் எங்கள் நாட்டுமக்களை மீட்கமாட்டோம்! கைகழுவி விட்ட நாடு!

Summary:

pakistan not ready to rescue their country people from china

சீனாவில் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உஹான் நகரில் தோன்றிய கொரனோ வைரஸ் தற்போது அதிதீவிரமடைந்துள்ளது.இதன் பாதிப்பால்  பாதிப்பினால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 10000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கொடிய வைரஸ் சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, ஜப்பான், வடகொரியா, தென்கொரியா, தாய்லாந்து என பல நாடுகளிலும் பரவி வருகிறது. அதனை குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் பல நாட்டினரும் சீனாவில் உள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகிறது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட  வுஹான் பகுதியில் உள்ள சுமார் 800 பாகிஸ்தான் மாணவர்களை  தங்களது நாட்டிற்கு அழைத்துவரமாட்டோம் என பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.  இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் ஜஃபார் மிஸ்ரா  கூறியதாவது, சீனாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் நலனே எங்களுக்கு முக்கியம். நாடு மற்றும் உலகின் நன்மை கருதியே வுஹானிலிருந்து பாகிஸ்தானியர்களை மீட்கவில்லை.

சீனாவுடன் தோள்கொடுத்து இதன் மூலம் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். சீன அரசு கொரோனாவைரஸை வுஹான் நகரத்திற்குள்ளேயே கட்டுப்படுத்தியுள்ளது. ஒருவேளை நாங்கள் பொறுப்பற்று எங்கள் நாட்டினரை மீட்டு பாகிஸ்தான் அழைத்துவந்தால் அந்த வைரஸ் இங்கும் காட்டுத்தீ போல பரவும். இது உணர்ச்சிப்பூர்வமாக முடிவெடுக்கும் நேரமில்லை.சீன அரசு கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிர போதுமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.


 


Advertisement