AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
நீச்சல் தெரியாததால் சோகம்.. திருமண வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த துயரம்.!
20 வயதுடைய இளைஞர் நீச்சல் தெரியாமல் நீச்சல் குளத்தில் இறங்கி குளித்தபோது உயிரிழந்தார்.
திருமண வீடு:
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள போபால் பகுதியில் வசித்து வருபவர் அயன் அகமது (வயது 20). சம்பவத்தன்று இவர் தனது நண்பரின் சகோதரி வீட்டில் நடந்த திருமணத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "என் பொண்டாட்டி ஓடிப் போயிட்டா".. கண்டுபிடித்து தந்தால் சன்மானம்.. விரக்தியில் அறிவிப்பு வெளியிட்ட கணவன்.!
தவறி விழுந்தார்:
இந்த திருமண கொண்டாட்டம் அங்குள்ள ஹரகேடா பகுதியில் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில் நடந்துள்ளது. அனைவரும் குதூகலமாக கொண்டாடிய நிலையில், இளைஞர் அயன் அகமது நீச்சல் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.
காவல்துறை விசாரணை:
அவருக்கு நீச்சல் தெரியாது எனக் கூறப்படும் நிலையில், நீச்சல் குளத்தில் விழுந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை மீட்ட நண்பர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20-yr-old youth drowns in swimming pool during wedding at #farmhouse in #Gunga
— The Times Of India (@timesofindia) May 31, 2025
Read more 🔗https://t.co/7GsGsWR6YF#Bhopal #MadhyaPradesh pic.twitter.com/unv4z4p7wo
இதையும் படிங்க: செருப்பால் அடித்ததற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்மணி..! இதெல்லாம் தேவையாம்மா?