செருப்பால் அடித்ததற்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்மணி..! இதெல்லாம் தேவையாம்மா?



in Karnataka a Girl Fight with Auto Driver and Then Compromise

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பெல்லந்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது இருசக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த ஆட்டோ இளம்பெண்ணின் இருசக்கர வாகனத்தில் லேசாக உரசியதாக தெரியவருகிறது. 

ஆட்டோ ஓட்டுனரை செருப்பால் அடித்த பெண்மணி :

இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஆவேசத்தில் ஆட்டோ ஓட்டுனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை தனது செல்போனில் ஆட்டோ ஓட்டுனர் வீடியோ எடுக்கவே, ஒரு கட்டத்தில் செருப்பை கழட்டி பலமுறை அவரை அடித்திருக்கிறார். 

இதையும் படிங்க: Accident: கார் - டூவீலர் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 4 இளைஞர்கள் துள்ளத்துடிக்க பலி.!

பெண்மணி தாக்கியது குறித்த வீடியோ :

பெண்மணி மீது புகாரளித்த ஆட்டோ ஓட்டுனர்:

மேலும் உன்னால் முடிந்ததை செய்து பார் என ஹிந்தியில் கத்தி விட்டு மற்றொரு நபரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்ததை கூறிவிட்டு பின் சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், ஆட்டோ ஓட்டுனர் பெண்மணி குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். 

காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பெண்மணி :

புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார் பெண்மணியை கைது செய்த நிலையில், தான் கர்ப்பமாக இருந்ததால் குழந்தைக்கு எதுவும் நிகழ்ந்து விடுமோ என்ற பயத்தில் அவ்வாறு செய்துவிட்டேன். எனக்கு பெங்களூரு மற்றும் அவர்களின் கலாச்சாரம் மிகவும் பிடிக்கும். இனி இப்படி ஒரு தவறை செய்ய மாட்டேன்" என ஆட்டோ ஓட்டுநரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

பெண்மணி மன்னிப்பு கேட்ட வீடியோ :

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பேமஸ் மருமகளின் மண்டையை உடைத்த மாமியார்.. காரணம் என்ன?