Accident: கார் - டூவீலர் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 4 இளைஞர்கள் துள்ளத்துடிக்க பலி.!



in Uttar Pradesh a Car Two Wheeler Face to Face Crash 4 Dies

இருசக்கர வாகனத்தின் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் நான்கு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் நான்கு இளைஞர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் நேற்று காலை பயணம் செய்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வந்த கார் இளைஞர்களின் வாகனம் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள் :

இந்த விபத்தில் இரண்டு இளைஞர்கள் காரின் பேனெட்டில் 100 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு இளைஞர் 20 அடி உயரம் பறந்து கீழே விழுந்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் பயங்கரம் :

இந்த சம்பவம் அங்குள்ள கோரக்பூர் - வாரணாசி தேசிய நெடுஞ்சாலையில் பரஹல்ஜங் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளது. விபத்தில் சுனில் குமார், பிரதியுமான், அரவிந்த் குமார், ராகுல் ஆகியோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

திருமணம் நடக்கும் முன் நிகழ்ந்த சோகம் :

இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளர்கள் ஆவார்கள். இதில் ராகுலுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்து குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது.

பதறவைக்கும் விபத்தின் வீடியோ :