கொரோனா சமயத்தில் பாக்கிஸ்தானில் விபத்து ஏற்பட்டு நொறுங்கி விழுந்த விமானம்! உலகத்தையே உலுக்கிய அதிர்ச்சி வீடியோ!

கொரோனா சமயத்தில் பாக்கிஸ்தானில் விபத்து ஏற்பட்டு நொறுங்கி விழுந்த விமானம்! உலகத்தையே உலுக்கிய அதிர்ச்சி வீடியோ!


pakistan-flight-accident


பாக்கிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற உள்நாட்டு விமானம் கராச்சியில் தரையிறங்கும் போது தீ பற்றி எரிந்து விழுந்தது.  இந்த விபத்தில் 99 பயணிகள் 8 ஊழியர்கள இந்த விபத்தில் பலியாகி உளளனர்.

பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம்  99 பயணிகளுடன் லாகூரில் இருந்து கராச்சி வந்தது. அப்போது கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும்பொழுது, விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் 99 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இதில் பயணம் செய்தவர்களில் இதுவரை 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, பல பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிர் சேதம் குறித்த முழு விவரம் இதுவரை வெளியாகவில்லை.

அதேபோல் விமானம் விழுந்து விபத்துக்குள்ளான பகுதி குடியிருப்பு பகுதி என்பதால் குடியிருப்பில் இருந்தவர்களும் இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளனர். பயணிகள் விமானம் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. விமான விபத்து குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.