உலகம்

அமெரிக்காவிலும் பரவிய ஒமிக்ரான்.! நடுங்கும் உலக நாடுகள்.!

Summary:

அமெரிக்காவிலும் பரவிய ஒமிக்ரான்.! நடுங்கும் உலக நாடுகள்.!

உலகத்தையே அச்சுறுத்திய கொரோனாவால் உலகின் பல நாடுகளில் பலர் பலியாகினர். தற்போது கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. 

இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.

இந்த ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 25-க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் அமெரிக்காவிலும் பரவத்தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் அறிகுறிகள் சிறிய அளவில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்படவேண்டாம் என சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement