சத்தமே இல்லாமல் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா...! ஷாக்கில் உலக நாடுகள்.!!

சத்தமே இல்லாமல் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா...! ஷாக்கில் உலக நாடுகள்.!!


North Korea Fire unidentified projectile Missile

வடகொரியாவின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தும், அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உத்தரவின் பேரில், அந்நாட்டு அரசு அணு ஆயுத தயாரிப்பில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியாவில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகிவரும் நிலையில், அரசு அணு ஆயுத தயாரிப்பில் கவனம் செலுத்துவதால் பெரும் சோகம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. 

மக்கள் தொடர்பான பிரச்சனைகள் ஊடகங்கள் மூலமாக வெளியாமல் இருக்க, அந்நாட்டின் ஊடகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவ்வப்போது அணு ஆயுத சோதனை நடைபெற்றால் அண்டை நாடுகளில் இருந்து வடகொரியாவை கண்காணிக்கும் இராணுவ அமைப்புகள் தகவல் தெரிவிக்கும். 

North Korea

இந்த நிலையில், கடந்த ஒரே மாதத்தில் 8 க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த வடகொரியா, நேற்று அடையாளம் தெரியாத ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

உக்ரைன் - ரஷியா பிரச்சனையில் உலக நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து வரும் நிலையில், வடகொரியா சக்திவாய்ந்த அணு ஆயுத சோதனை நடத்தலாம் என கூறப்பட்டது. அந்த வகையில், அடையாளம் தெரியாத ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா இரண்டாம் கிங் சங்கின் (Kim Il-sung) 100 ஆவது பிறந்தநாள் விழா ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அந்நாளில் பல ஏவுகணைகள் வெளியுலகுக்கு காண்பிக்கப்படலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.