இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 3 விஞ்ஞானிகள் தேர்வு.!

இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. 3 விஞ்ஞானிகள் தேர்வு.!



nobel-prize-for-physics-announcement-3-scientists-selec

நோபல் பரிசு என்பது இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், அமைதி, பொருளியல் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு பரிசாகும். இந்த நோபல் பரிசானது ஆல்ஃபிரட் நோபல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.

இந்த நோபல் பரிசை பெரும் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப் பதக்கம், ஒரு பட்டயம் மற்றும் பரிசு தொகையும் அவர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் இயற்பியலுக்கான நோபல் பரிசு இவ்வருடம் மூன்று விஞ்ஞானிகளான பியரி அகோஷ்டினி, பெரண்ஸ் க்ரௌஸ், ஆனி ஹீலியர் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்கள் பொருண்மையில் எலக்ட்ரான் டைனமிக்ஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், அதனுடன் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்கு உள்ளே உள்ள எலக்ரான்களின் செயல்பாடுகள் குறித்து  ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.