உலகம்

இப்படி ஒரு சிங்கத்தை இதற்கு முன் பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படம்.

Summary:

Newly born albino lion kids in china photos

பொதுவாக சிங்கம் என்றாலே மிகப்பெரிய தோற்றத்துடன், சற்று மஞ்சளான அல்லது பழுப்பு நிறத்தில்தான் கம்பீரமாக பார்த்திருப்போம். ஆனால், சீனாவில் உள்ள ஷான்டாங் என்ற பகுதியில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் ஆப்ரிக்க சிங்கங்களின் ஒரு வகையான அல்பினோ எனும் வெள்ளை நிற சிங்கங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிங்கங்களில் ஓன்று ஒரே பிரசவத்தில் இரண்டு வெள்ளை நிற சிங்க குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த சிங்கம் மற்ற சிங்கங்கங்களை விட மிகவும் அரிதானதாக கூறப்படுகிறது.

புதிதாக பிறந்துள்ள சிங்க குட்டிகளுக்கு அடிக்கடி ஆட்டு பாலும் உணவாக வழங்கப்பட்டு வருகிறதாம். இந்த அறிய வகை சிங்க குட்டிகளின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Advertisement