பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானம் அருகே... பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு..!

பாகிஸ்தானில் கிரிக்கெட் மைதானம் அருகே... பயங்கரவாதிகள் சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு..!


Near the cricket ground in Pakistan... Terrorists powerful explosion..

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சமீப காலமாக பாகிஸ்தானில் பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாக்கிஸ்த்தானில் தற்போது தெரிக்-இ-தாலிபான் என்ற பயங்கரவாத குழுவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த அமைப்பு பாகிஸ்த்தானில் தொடர் தீவிரவாத தாக்குதலை முன்னெடுத்து வருகின்றது. 

பெஷாவரில் இருக்கும் மசூதியில் கடந்த வாரம் தெரிக் -இ-தாலிபான் நடத்திய வெடிகுண்டு பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதன் காரணமாக பாகிஸ்தான் மக்கள் பீதியான சூழலில் உள்ளனர். 

இந்நிலையில் தெரிக் இ தாலிபான் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதி அருகே உள்ள குவெட்டா என்ற பகுதியில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அங்கு காவல்துறையினர் முகாமிட்டு ரோந்து பணி செய்யும் பகுதியில் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கோர தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல் நடத்த சில கிலோமீட்டர் தூரத்தில் தான் பாகிஸ்தானின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கண்காட்சி போட்டியில் விளையாடினர். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான ப்ரோமோ போட்டியானது குண்டு வெடிப்பு சம்பவ இடத்திற்கு அருகே இருக்கும் நவாப் அக்பர் புக்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்க பாபர் அசாம், சாஹித் அஃப்ரிடி போன்ற முன்னணி வீரர்கள் வருகை தந்திருந்தனர்.