உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

மருத்துவ உலகமே வியப்பில் இருக்கு!! இப்படி ஒரு குழந்தை இதற்கு முன் பிறந்ததே இல்லை.. ஈரானில் நடந்த வினோதம்..

Summary:

வடக்கு ஈரானை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு மூன்று ஆணுறுப்புகள் இருந்த சம்பவம்

வடக்கு ஈரானை சேர்ந்த பெண் ஒருவருக்கு பிறந்த குழந்தைக்கு மூன்று ஆணுறுப்புகள் இருந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஈரான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு பிரசவ வலி வரவே, மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போதுதான் அந்த ஆச்சரிய சம்பவத்தை மருத்துவர்கள் பார்த்துள்ளனர்.

ஆம், அந்த பெண்ணிற்கு பிறந்த ஆண் குழந்தைக்கு மூன்று ஆணுறுப்புகள் இருந்துள்ளது. இதனால் பெரிதும் வியப்படைந்த மருத்துவர்கள், உலகில் இதுவரை எந்த ஒரு குழந்தைக்கும் இப்படி மூன்று ஆணுறுப்புகளுடன் பிறந்தது இல்லை என்றும், இதுவே உலகில் முதல் முறை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக பல கோடிகளில் ஒரு குழந்தை இரண்டு ஆணுறுப்புடன் பிறந்துள்ளது, ஆனால் மூன்று ஆணுறுப்புடன் பிறந்தது இந்த குழந்தைதான் என கூறிய மருத்துவர்கள், அந்த குழந்தையின் ஒரு ஆணுறுப்பு மட்டுமே வேலை செய்வதாகவும், மற்ற இரண்டினால் அந்த குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால், அவற்றை அறுவை சிகிச்சை செய்து நீக்கிவிட முடிவு செய்துள்ளனர்.


Advertisement