காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
தூக்கிலிடப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால் உடலை பொதுஇடத்தில் 3 நாள் தொங்கவிட வேண்டும்! பகீர் தீர்ப்பு!

2001-ம் ஆண்டு முஷரப் பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக இருந்தபோது ராணுவ புரட்சியை ஏற்படுத்தி நவாஸ் ஷெரீப்பின் ஆட்சியை கைப்பற்றினார். மேலும், 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி நெருக்கடி நிலையை அறிவித்தார். டிசம்பர் 15-ந் தேதி வரை நெருக்கடி நிலை அமலில் இருந்தது.
இதன்பிறகு 2014-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும் முஷரப் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து வினோத நோயால் பாதிக்கப்பட்ட முஷரப் துபாய் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் மீண்டும் நாடு திரும்பவில்லை.
இந்நிலையில் முஷரப் மீது போடப்பட்ட வழக்கின் தீர்ப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதில், தேச துரோக குற்றத்திற்காக முஷரப்பிற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தற்போது அந்த தீர்ப்பின் முழு விவரம் வெளியாகியுள்ள நிலையில், ஒருவேளை தூக்கிலிடும் முன்பே முஷரப் இறந்துவிட்ட அவரது உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சவுக் பகுதிக்கு கொண்டுவந்து மூன்று நாட்கள் தூக்கில் தொங்கவிடவேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.