
Image credits: VK.com
Image credits: VK.com
இரண்டு குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு நண்பர்களுடன் மது விருந்திற்கு சென்ற பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரஷ்யாவில்தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்தநிலையில் 3 வயது மகள் மற்றும் 11 மாத ஆண் குழந்தையுடன் தனியாக வசித்துவந்துள்ளார். இந்நிலையில் தனது இரண்டு குழந்தைகளையும் வீட்டில் வைத்து பூட்டிவிட்டு அந்த பெண் தனது நண்பர்களுடன் மது விருந்து ஒன்றுக்கு சென்றுள்ளார்.
(Image: VK.com)
பூட்டிய வீட்டில் நான்கு நாட்கள் பசியோடு இருந்த அந்த குழந்தைகளில் 11 மாத ஆண்குழந்தை பசியால் உயிரிழந்துள்ளது. 3 மாத பெண் குழந்தை மிகவும் மோசமான நிலையில் உயிருக்கு போராடியுள்ளது. இந்த சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி கொடுத்த புகாரை அடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
தாய் என்ற முறையில் அந்த குழந்தைகளை சரியாக பராமரிக்க குற்றத்திற்காக அந்த பெண்ணிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் கேட்போரை கண்கலங்கவைத்துள்ளது.
Advertisement
Advertisement