அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்ற எம்.எஸ்.தோனி, கபில்தேவ்: வைரலாகும் வீடியோ..!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்ற எம்.எஸ்.தோனி, கபில்தேவ்: வைரலாகும் வீடியோ..!



MS Dhoni, Kapil Dev participated in the US Open tennis tournament

 

டென்னிஸ் போட்டிகளின் சிகரமாக ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகள் கருதப்படுகிறது. இதில் அமெரிக்க ஓபன், பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டித் தொடர்களில் வெற்றி பெறுவதை உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் லட்சியமாக கொண்டிருப்பர்.

அந்த வகையில் 'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த வீரர் கார்லஸ் அல்காரஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் 6-3, 6-7 (7-9), 6-7 (0-7), 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி வெற்றி பெற்ற கார்லஸ் அல்காரஸ் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் கபில்தேவ் நேரில் கண்டு ரசித்துள்ளனர். இந்த போட்டியை எம்.எஸ்.தோனி கண்டுகளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தோனியை கண்டு ஆரவாரம் செய்த ரசிகர்களுக்கு எம்.எஸ். தோனி புன்னகையுடன் கை அசைக்கும் வீடியோ இணையத்தை ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.