10 வயதிலிருந்து சொந்த மகனுடன் உறவில் இருந்த தாய்! டிஎன்ஏ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி! மகனின் கண்ணீர் வாக்குமூலம்.!!!



mother-sexual-abuse-son-dna-shock-case

சொந்தத் தாயால் பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறிய மகன் தொடர்பான வழக்கில் புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அந்தத் தாய்க்குப் பிறந்த இளைய குழந்தைக்கு, பாதிக்கப்பட்ட மூத்த மகனே உயிரியல் தந்தை என டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, குடும்பத்தினரிடமும் பொதுமக்களிடமும் கடும் அதிர்ச்சி நிலவுகிறது.

16 வயதில் தாய்மீது புகார்

2015-ம் ஆண்டு, 16 வயதாக இருந்தபோது தனது தாயார் டோரீன் கிஃபோர்டுக்கு எதிராக அந்த இளைஞர் புகார் அளித்தார். 10 வயதிலிருந்தே தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து நடைபெற்ற விசாரணையில், டோரீன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன.

இதனால் நீதிமன்றம் அவருக்கு 8 முதல் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதித்தது. மேலும், அவர் பாலியல் குற்றவாளி பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: பெரும் அதிர்ச்சி.... வளர்ப்பு தாய் பாராமரிப்பில் இருந்த சிறுவன் குழியில் தொட்டியில் மூழ்கி மரணம்!

டிஎன்ஏ பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி

வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் டோரீன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தது குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. குழந்தையின் உயிரியல் தந்தை யார் என்பதை கண்டறிய, டோரீனின் கணவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து DNA பரிசோதனை நடத்த கோரினார்.

அதன்பின் நடத்தப்பட்ட பரிசோதனையில், குழந்தையின் டிஎன்ஏ டோரீனின் மூத்த மகனுடனும் அவரது கணவருடனும் 99.9 சதவீதம் பொருந்தியிருந்ததாக தகவல் வெளியானது. இந்த முடிவு வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

நீதிமன்ற தீர்ப்பு மற்றும் சந்தேகம்

இதையடுத்து, அந்த இளைய குழந்தைக்குச் சட்டப்பூர்வ தந்தை மூத்த மகனே என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், டிஎன்ஏ முடிவுகள் முழுமையான தெளிவை வழங்கவில்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட இளைஞர், அந்தக் குழந்தை தன்னுடைய மகனாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே இருந்ததாக தெரிவித்துள்ளார். குடும்ப உறவுகளின் அடிப்படை நம்பிக்கையையே சிதைக்கும் வகையில் அமைந்துள்ள இந்த வழக்கு, பல்வேறு நாடுகளில் சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

இதையும் படிங்க: ரகசியமாக போலீசுக்கு கால் செய்து 14 வயது சிறுமி சொன்ன அந்த ஒரு வார்த்தை! பல ஆண்டுகளாக நடந்த கொடூரம்... ஒரே நாளில் அம்பலமான அதிர்ச்சி உண்மை.!!!