உலகம்

11 வயது மகனை துடிதுடிக்க கொன்று பெட்டியில் அடைத்த தாய்! இதற்காகவா? அம்பலமான திடுக்கிடும் காரணம்.!

Summary:

Mother killed 11 year son for using mobile continuously

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி. 33 வயது நிறைந்த இவருக்கு திருமணமாகி இரு ஆண்குழந்தைகள் உள்ளனர். மேலும் கணவருடன்  விவாகரத்தான இவர் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.  அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கியின் 11 வயது நிறைந்த மகன் ரஃபேல். இவர் செல்போனில் கேம் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். மேலும் எப்பொழுதும் செல்போனும், கையுமாகவே இருந்து வந்துள்ளார். இந்நிலையில்  சமீபத்தில் அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கி,  மகன் ரஃபேலிடம் செல்போனில் நீண்ட நேரம் கேம் விளையாட வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்துள்ளார். 

ஆனால் அதனை ரஃபேல் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தாய் ரஃபேலின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் இறந்த தனது மகனின் சடலத்தை பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு அட்டைப்பெட்டிக்குள் வைத்து மூடியுள்ளார். பின்னர் அதனைத் தனது வீட்டின் கேரேஜில் வைத்துள்ளார். 

இந்நிலையில் ரஃபேலின் சடலத்தை வைத்து 10 நாட்களுக்கும் மேலான நிலையில், அப்பகுதியில் மோசமான அழுகிய துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்களுக்கு  சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சடலத்தை கண்டறிந்து போலீசார் அலெக்ஸாண்ட்ரா டகோகென்ஸ்கிவிடம்  விசாரித்தபோது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

பின்னர் விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், அவர் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement