ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த மீன்கள்! இங்கிலாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! என்ன காரணம்?

ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி துடிதுடித்து இறந்த மீன்கள்! இங்கிலாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! என்ன காரணம்?


millions-of-shore-dead-fish-in-the-uk-beach-viral-photo

இங்கிலாந்தில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கி, துடி துடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் நார்த் வேல்ஸ் பகுதியில் உள்ள பெனார் கடல் பகுதியில் லட்சக்கணக்கான மீன்கள் திடீரென கரை ஒதுங்கியுள்ளது. ஒரே இடத்தில் இல்லாமல் பல கிலோமீட்டர் தூரத்திற்கு கரை ஒதுங்கிய மீன்கள் சில நேரத்தில் துடி துடித்து உயிரிழந்துள்ளது.

Viral News

சீல் அல்லது டால்பின்கள் போன்ற பெரிய உயிரினங்கள் கூட்டமாக துறையிருக்கலாம் எனவும், அவற்றிடம் இருந்து தப்பிக்க இந்த மீன்கள் கரை அருகே வந்து, மீண்டும் திரும்ப முடியாமல் உயிரிழந்திருக்கலாம் எனவும் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மீன்கள் உயிரிழந்துகிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.