உலகம்

இப்படி ஒரு கல்யாணம் எந்த ஊர்லடா நடக்குது! முத்தத்தால் மணமக்களை வாழ்த்தி செல்லும் நண்பர்கள்!வைரலாகும் வீடியோ.

Summary:

Marriage kisses

ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு சில பொதுவான சடங்குகள் நடைப்பெறுவது வழக்கம். ஆனால் இங்கு திருமணத்தில் வித்தியாசமான சடங்குகளை செய்து மணமக்களை வாழ்த்தும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாக மணமக்களை வாழ்த்துவது என்றால் அவர்களிடம் பரிசு பொருட்களை கொடுப்பது, கேக் வெட்டுவது, அவர்களுடன் செல்பி எடுத்து கொள்வது என்று தான் செய்வார்கள். இதை தான் நாம் திருமண விழாக்களிலும் பார்த்திருப்போம்.

ஆனால் இங்கு ஒரு ஜோடிக்கு நண்பர்கள் பரிசு பொருட்களை கொடுத்து முத்தத்தால் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆண் நண்பர் என்றால் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுப்பதும், பெண் நண்பர்கள் மணமகனுக்கு முத்தம் கொடுப்பது என்று மாறி மாறி முத்தம் கொடுத்துள்ளனர்.


Advertisement