உலகம்

உடம்பில் ஏதோ ஊர்வதுபோல உணர்ந்த பெண்! கண்விழித்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி! விமானத்தில் அவலம்!

Summary:

Man sexual abuse in flying flight

அட்லாண்டாவில் இருந்து டெட்ராய்ட் பகுதிக்கு செல்லும் விமானத்தில் டியா ஜாக்சன் என்பவர் பயணம் செய்துள்ளார். அப்பொழுது அவர் ஜன்னலோரம் உள்ள இருக்கையில் அமர்ந்தவாறு தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அவரை யாரோ தொடுவது போல இருந்துள்ளது. உடனே அவர் பக்கத்தில் இருப்பவரின் கை தெரியாமல் பட்டிருக்கும் என எண்ணி மீண்டும் தூங்கியுள்ளார். 

 ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் அந்த நபர் வேண்டுமென்றே கை வைப்பதை உணர்ந்த அவர்  திடுக்கிட்டு எழுந்துள்ளார். பின்னர் என்னை தொடாதே என அவரை தள்ளிவிட்டு சத்தமிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து விமான பணிப்பெண் ஒருவரிடமும் புகார் செய்துள்ளார். ஆனால் விமானத்தில் இவர் அளித்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும் விமானம் தரைஇறங்கும் நிலையில் இருந்ததால் அனைவரும் கட்டாயம் ஒரே இடத்தில் அமர வேண்டிய சூழலும்  ஏற்பட்டது. இடமும் மாறி அமர முடியவில்லை. பின்னர் விமானம் டெட்ராய்ட் பகுதியில் தரை இறங்கியதும் அதிலிருந்து இறங்கிய டியா உடனே விமான நிலைய போலீசாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். 

மேலும் அவரை சாதாரணமாக விட கூடாது எனவும், அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்னைப் போல வேறு எந்த பெண்ணும் பாதிக்கப்படக்கூடாது எனவும் டியா கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement