பிரான்ஸ் நாட்டின் அதிபரை கண்ணத்தில் அறைந்த நபருக்கு என்ன தண்டனை தெரியுமா? வைரல் வீடியோ..

பிரான்ஸ் நாட்டின் அதிபரை கண்ணத்தில் அறைந்த நபருக்கு என்ன தண்டனை தெரியுமா? வைரல் வீடியோ..


Man sentenced 4 months jail who slapped France president

பிரான்ஸ் நாட்டின் அதிபரை கண்ணத்தில் அறைந்த நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு மாதம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டுல் கொரோனா பரவல் காரணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அந்நாட்டு அதிபர் மேக்ரான், தன்னை வரவேற்பதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடம் சென்று கைகுலுக்கினார். அப்போது முன்வரிசையில் நின்றுகொண்டிருந்த நபர் ஒருவர், அதிபரின் ஒரு கையை பிடித்துக்கொண்டு மறுகையால் அதிபரின் கண்ணத்தில் பளாரென ஓங்கி அறைந்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத அதிபர் ஒரு நொடி நிலைகுலைந்துபோனார். பின்னர் அங்கு ஓடிவந்த பாதுகாப்பு அதிகாரிகள், அந்த நபரை கைது செய்தனர். இந்நிலையில் அதிபரை கண்ணத்தில் அறைந்த குற்றத்திற்காக அந்த நபருக்கு 18 மாதங்கள் சிறைதண்டனை  விதித்து, இதில் 4 மாதங்கள் சிறையிலும், 14 மாதங்கள் சட்ட காவல் கண்காணிப்பிலும் கழிக்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இவர் மீதான கண்காணிப்பு தொடரும் எனவும், அதற்குள் வேறு ஏதேனும் குற்றம் செய்தால், வாழ்நாள் முழுக்க சிறையில் கழிக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.