கொடூரத்தின் உச்சம்... பிறந்த குழந்தையை உயிருடன் புதைத்த தந்தை.!! விசாரணையில் வெளியான பகீர் தகவல் .!!man-murder-his-15-days-old-daughter-police-arrest-the-a

மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட தந்தையிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

வறுமை

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் வசித்து வருபவர் தாயாப். இவருக்கு திருமணமான நிலையில் இவரது மனைவி பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்திருக்கிறார். அந்தக் குழந்தைக்கு பிறந்த நாளிலிருந்து உடல் நலக்குறைபாடு இருந்து வந்திருக்கிறது. கடுமையான வறுமையில் இருந்த தந்தையான தாயாப் தனது குழந்தையின் மருத்துவ செலவை சமாளிக்க முடியாமல் திணறி இருக்கிறார்.

World news

உயிருடன் புதைத்த கொடூரம்

குழந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி இருக்கிறது. இந்நிலையில் குழந்தை நோயினால் கஷ்டப்படுவதை தாங்க முடியாத தாயாப் அதனை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 15 நாட்களே ஆன தனது பச்சிளம் குழந்தையை குழி தோண்டி அதில் போட்டு உயிருடன் புதைத்துள்ளார் தாயாப். இந்த சம்பவத்தில் குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளது.

இதையும் படிங்க: சாகுற வயசா இது?.. பேட்மிட்டன் விளையாடியபடி துள்ளத்துடிக்க 2 நிமிடங்களில் உயிரிழந்த 17 வயது சிறுவன்.! பதறவைக்கும் வீடியோ.!

கைது செய்த காவல்துறை

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் புதைக்கப்பட்ட குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக குழந்தையின் தந்தை தாயாபை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: ஒருநாளைக்கு ஒன்றுதானே., என சிகிரெட் பிடிப்பவரா நீங்கள்?.. உங்களின் நுரையீரல் இப்படித்தான் இருக்குமாம்.. பகீர் வீடியோ.!