சாகுற வயசா இது?.. பேட்மிட்டன் விளையாடியபடி துள்ளத்துடிக்க 2 நிமிடங்களில் உயிரிழந்த 17 வயது சிறுவன்.! பதறவைக்கும் வீடியோ.!Indonesia Badminton Player Dies 

 

இந்தோனேசியாவில் உள்ள யோகியர்தா நகரில் வைத்து ஆசிய பேட்மிட்டன் ஜூனியர் சாம்பியன்சிப் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று சீன நாட்டை சேர்ந்த ஜாங் ஜிஜியே - ஜப்பான் நாட்டை சேர்ந்த கஸுமா கவனோ ஆகியோர் மோதிக்கொண்டனர். 

மயங்கி விழுந்த ஜிஜியே

இந்த ஆட்டத்தின்போது, சீன நாட்டை சேர்ந்த பேட்மிட்டன் பிளேயர் ஜிஜியே, திடீரென மயங்கி டென்னிஸ் கோர்ட்டிலேயே சரிந்து விழுந்தார். அப்போது, அவருடன் விளையாடிய சக வீரர், மருத்துவ குழுவினரை அழைத்து பார்க்க கூறினார். மேலும், போட்டியை நேரில் கொண்டவர்களும் செய்வதறியாது பதறிப்போயினர். 

இதையும் படிங்க: ஒருநாளைக்கு ஒன்றுதானே., என சிகிரெட் பிடிப்பவரா நீங்கள்?.. உங்களின் நுரையீரல் இப்படித்தான் இருக்குமாம்.. பகீர் வீடியோ.!

17 வயதில் மாரடைப்பு மரணம்

சில நொடிகளில் அவரின் கை-கால்கள் அசைந்தாலும், அவரால் எழுந்துகொள்ள இயலவில்லை. அவரின் உயிர் ஊசலாடிக்கொண்டு நிலையில், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரின் உயிர் முன்னதாகவே மாரடைப்பால் பிரிந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். உயிரிழந்த ஜிஜியேவின் வயது 17 ஆகும்.

இந்த விஷயத்தின் அதிர்ச்சி காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: இரயில் பயணிகளை குளிக்கவைத்த இளைஞர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த பயணிகள்.. நையப்புடைத்து பைக்கை தூக்கி சென்றதால் பரபரப்பு.!