ஒருநாளைக்கு ஒன்றுதானே., என சிகிரெட் பிடிப்பவரா நீங்கள்?.. உங்களின் நுரையீரல் இப்படித்தான் இருக்குமாம்.. பகீர் வீடியோ.!chen-jingyu-lung-transplantation-team-52-years-old-smok

 

சீனாவில் உள்ள கிழக்கு ஷாங்காய் மாகாணம், வூக்சி நகரில் அமைந்துள்ள நான்ஜிங் மருத்துவ பல்கலைக்கழகத்தில், நுரையீரல் மாற்று சிகிச்சை மையத்தின் துறைத்தலைவராகவும், மூத்த அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி வருபவர் மருத்துவர் சென் ஜிங்கியு. இவர் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சையின் நிபுணர் ஆவார். 

சமீபத்தில் இவரிடம் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் தானமாக பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 52 வயதுடைய மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள், அவரின் குடும்பத்தினரால் முன்வந்து தானமாக வழங்கப்பட்ட நிலையில், அவரின் உடல் உறுப்புகளை பெற்றுக்கொண்ட மருத்துவர்களுக்கு அதிர்ச்சிதரும் விஷயம் ஒன்று காத்திருந்தது. 

இதையும் படிங்க: இரயில் பயணிகளை குளிக்கவைத்த இளைஞர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த பயணிகள்.. நையப்புடைத்து பைக்கை தூக்கி சென்றதால் பரபரப்பு.!

நுரையீரலா இது?..

அதாவது, உடலுறுப்பு தானம் செய்த நபரின் நுரையீரல் கருப்பான நிறத்தில், தூசி, எம்பஸிமா, காசநோய் அறிகுறியுடன் தோன்றியுள்ளது. இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள மருத்துவக்குழு, ஒருநாள் ஒன்றுக்கு ஒரு பாக்கெட் வீதம், கடந்த 30 ஆண்டுகளாக சிகிரெட் பிடிப்போரின் நிலை இதுதான் என தெரிவித்துள்ளார். 

பார்க்கவே நெஞ்சை பதறவைக்கும் அந்த காட்சிகள் உங்களின் பார்வைக்காகவும் இணைக்கப்பட்டுள்ளது. புகை பிடிப்போர் இதனை பார்த்தாவது திருந்தவேண்டும் என்பதற்காக இவ்வீடியோ பகிரப்பட்டுள்ளது. இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்க வேண்டாம். இதையும் பார்த்துவிட்டு அவன் கிடக்குறான் என்ற பாணியில் ஒருநாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் சிகிரெட் பிடித்தாலும், உங்களின் நிலைமை நாளை இதுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புகைபிடிப்பவரின் நுரையீரலுக்கே இந்த நிலை என்றால், அதன் அருகில் நின்று வேறு வழியின்றி புகை வாசனையை சுவாசிக்கும் நபரின் நிலைமையும் கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்கும். ஆகையால், தம் அடிப்பதுதான் கெத்து என்ற விஷயத்தை எந்த நிலையிலும் ஊக்குவிக்க வேண்டாம். 

இதையும் படிங்க: இரயில் பயணிகளை குளிக்கவைத்த இளைஞர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த பயணிகள்.. நையப்புடைத்து பைக்கை தூக்கி சென்றதால் பரபரப்பு.!