ஐயோ.! கடவுளே.. கொடி அகற்றும் பணியின் போது திடீரென சாய்ந்த ஹைட்ரா இயந்திரம்! உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கிய இளைஞர்..! இறுதியில் நடந்த அதிசயம்.... திக் திக் வீடியோ..!!!



young-man-escapes-hydra-machine-electrical-wires

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உயர் அழுத்த மின் கம்பிகளில் படர்ந்திருந்த கொடிகளை அகற்றும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். ருத்ராபூர் கத்ரி மோர் பகுதியில் ஹைட்ரா இயந்திரத்தின் உதவியுடன் உயரத்தில் பணியாற்றியபோது, இயந்திரம் திடீரென சாய்ந்ததால் அவர் அந்தரத்தில் தொங்கும் நிலை ஏற்பட்டது. இந்தப் பதற்றமான காட்சியைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திடீரென சாய்ந்த ஹைட்ரா இயந்திரம்

அப்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகளில் படர்ந்திருந்த கொடிகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதற்காக ஹைட்ரா இயந்திரம் மூலம் இளைஞர் ஒருவர் அதிக உயரத்திற்குத் தூக்கப்பட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இயந்திரம் சமநிலையை இழந்து ஒரு பக்கமாகச் சாயத் தொடங்கியது.

இதையும் படிங்க: என்ன மனுஷன்யா இவரு..? உயிருடன் இருக்கும்போதே தனக்குத்தானே 13-ம் நாள் காரியம் செய்த 80 வயது முதியவர்..! பின்னணி அதிரவைக்கும் காரணம்... வியக்கவைக்கும் சம்பவம்..!!!

இதனால் மேலே இருந்த இளைஞர் உயர் அழுத்த மின் கம்பியைப் பிடித்தபடி அந்தரத்தில் தொங்கினார். எந்த நேரத்திலும் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் உருவானதால், அங்கு கூடியிருந்த மக்கள் பதற்றமடைந்தனர். இருப்பினும், நல்வாய்ப்பாக இளைஞர் பெரும் ஆபத்தில் இருந்து உயிர் தப்பினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது குறித்து கேள்வி

உயர் அழுத்த மின் கம்பிகளுக்கு அருகே ஆபத்தான பணியை மேற்கொண்டபோது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி இத்தகைய பணியை மேற்கொள்ள அனுமதித்தது யார் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மின்துறை மற்றும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரின் அலட்சியம் குறித்து சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டிற்கு உரிய பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

 

இதையும் படிங்க: வேலை முடிந்து வீடு திரும்பிய மனைவி கண்ட அதிர்ச்சி! தந்தை செய்த கொடூரம்... கதறிய தாய் ! புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுக்க உத்தரவு..!!!