வயிறுவலியால் துடித்த நபர்.! அறுவை சிகிச்சை செய்தபின் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! மீன் சாப்பிட்டதால் நடந்த விபரீதம்.! - TamilSpark
TamilSpark Logo
உலகம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிறுவலியால் துடித்த நபர்.! அறுவை சிகிச்சை செய்தபின் மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.! மீன் சாப்பிட்டதால் நடந்த விபரீதம்.!

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் சரியாக வேகாத மீனை அடிக்கடி உட்கொண்டதால் அவரது கல்லீரலில் பாதியை இழந்துள்ள சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.

சீனாவை சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்றுவலியை உணர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் வலி தாங்க முடியமால் மருத்துவர்களை சந்தித்துள்ளார். வயிற்றை ஸ்கேன் செய்து வருமாறு மருத்துவர்கள் அவரை அனுப்பியுள்ளனர். அவரும் ஸ்கேன் முடிவுடன் மருத்துவர்களை சந்திக்க, ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காரணம் அவரது கல்லீரலில் புழு வைத்து சீல் பிடித்தவாறு இருந்துள்ளது. மேலும் அந்த இடத்தை சுற்றிலும் கட்டிகளும் வளர தொடங்கியுள்ளது. உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து மருத்துவர்கள் அந்த நபரின் பாதி கல்லீரலை அகற்றி அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் நோயாளியிடம் விசாரித்தபோது, அவர் மீன்களை சரியாக வேகவைக்காமல் பச்சையாக தின்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மருத்துவர்கள், மீன் சரியாக வேகவைக்கப்படாததால் மீனில் இருக்கும் ஒட்டுண்ணி புழுக்கள் மனிதனின் உடலுக்குள் புகுந்து அவரது கல்லீரலில் முட்டையிட்டு இந்த சேதத்தை உருவாகியிருக்கலாம் என கூறியுள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo