தோண்ட தோண்ட வந்த தங்க காசுகள்.. புதையலை கண்டுபிடித்தவருக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..

தோண்ட தோண்ட வந்த தங்க காசுகள்.. புதையலை கண்டுபிடித்தவருக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..


Man found treasure in Jerman

ஜெர்மனியில் கல்லறை ஒன்றை சுத்தம் செய்த நபர் ஒருவருக்கு புதையல் கிடைத்த சம்பவமும், அதன்பிறகு அவருக்கு காத்திருந்த ஏமாற்றமும் தற்போது பரவலாக பேசப்பட்டுவருகிறது.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் அருகில் இருக்கும் கல்லறை ஒன்றை சுத்தம் செய்தபோது அங்கு பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணம் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். இதனால் தனக்கு புதையல் கிடைத்துள்ளதாக அவருக்கு பெரும் மகிழ்ச்சி.

இதனை அடுத்து அவர் இந்த புதையல் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஜெர்மன் நாட்டு சட்டப்படி, பூமிக்கு அடியில் கண்டெடுக்கப்படும் புதையலுக்கு யாரும் உரிமை கோராவிட்டால், அந்த புதையலில் பாதி, அதை முதலில் கண்டுபிடித்தவருக்கே சேரும்.

இதனால் தனக்கு அந்த புதையலில் பாதி கிடைக்கும் என அந்த நபர் பெரும் எதிர்பார்ப்போடு இருந்துள்ளார். இதனிடையே அந்த புதையலில் இருந்த தங்க நாணயம் மற்றும் பணத்தின் மதிப்பு சுமார் ஐந்து லட்சம் யூரோக்கள் என மதிப்பிடப்பட்டது. அதேநேரம் அந்த பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனால் தனக்கு எப்படியும் பாதி பணம் கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்த அந்த நபருக்கு எதுவும் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் கண்டெடுத்த புதையலில் இருந்த நாணயங்களில் பல 016ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது; யாரோ ஒருவர்தான் சமீபத்தில் இவற்றை இங்கு மறைத்து வைத்திருக்கிறார்கள். எனவே இது புதையல் இல்லை. அதனால் அவருக்கு எந்த பங்கும் தர முடியாது என கூறிவிட்டது.

தனக்கு சரி பங்கு கிடைக்கும் என காத்திருந்த நபருக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.