ஓடும் காரில் விஷப்பாம்புடன் சண்டை போட்ட நபர்! இறுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்!
ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து நகர் நெடுஞ்சாலையில் 27 வயது நிறைந்த நபர் ஒருவர் காரில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது அந்த காரில் இருந்த விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இதனை உணர்ந்து சுதாகரித்து அந்த நபர் காரை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் பாம்பு அவரது காலைச் சுற்றியது. பின்னர் கால்களுக்கிடையே ஊர்ந்து அவர் உட்காந்திருந்த சீட்டையும் தாக்கியது.
இந்நிலையில் வாகனத்தை நிறுத்தித் தப்பிப்பதற்கு வழியில்லாமல், அந்த நபர் ஓடும் காரிலே சீட்பெல்ட் மற்றும் கத்தியை வைத்து பாம்புடன் சண்டைபோட்டுள்ளார். அப்பொழுது கார் நெடுஞ்சாலையில் மிக அதிகமான வேகத்துடன் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் காவல் அதிகாரிகள் அவரது காரை விரட்டிசென்று நிறுத்தியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, அவர் நடந்த அனைத்தையும் காவலர்களிடம் கூறி மருத்துவமனைக்குச் செல்வதற்காகவே வேகமாக செல்வதாக கூறியுள்ளார். பின்னர் காவல் அதிகாரிகள் அவருக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்துள்ளனர். மேலும் அப்பொழுது காரின் பின்பகுதியில் பாம்பு இருந்துள்ளது. இதுகுறித்த வீடியோவை காவல் அதிகாரிகள் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது.