உலகம் வீடியோ

காதல்மனைவியை பழிவாங்க, கழிவறைக்குள் சென்று கணவன் செய்த மோசமான காரியம்! வைரலான ஷாக் வீடியோ!

Summary:

​Man Cleans Toilet With wife Toothbrush

ஆஸ்திரேலியா தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி married at first sight. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்வர். இதில் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்த நபர்களை தேர்வுசெய்து  திருமணம் செய்து கொள்ளலாம். பிறகு இருவரும் ஹனிமூன் அனுப்பப்படுவர். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்த பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருவரும் ஒன்றாக வாழ்வர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்குமிடையே மனது ஒத்துபோனால் தொடர்ந்து சேர்ந்து வாழ்வர். இல்லையெனில்  பிரிந்து விடுவர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட டேவிட் கேனான் என்பவர் ஹேலே வெர்னன் என்ற  பெண்ணை சந்தித்து காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சில காலங்கள் ஒன்றாக வாழ்ந்த இருவருக்குமிடையே சமீபகாலமாக மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

       

மேலும் டேவிட்டுக்கு தனது மனைவி ஹேலேவேறு நபருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரை பழிவாங்க எண்ணிய கணவர் டேவிட் தனது மனைவி பல்துலக்கும் பிரஷ்ஷை கொண்டு கழிவறையை சுத்தம் செய்துள்ளார். மேலும் அதனை டேவிட் தனது செல்போனில் வீடியோ எடுத்து தனது நண்பருக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அந்த நபர் உடனே ஹேலேவிற்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். மேலும் அந்த பிரஷ்ஷை பயன்படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.  இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தன்னை பழிவாங்குவதற்காக கணவன் செய்த மோசமான செயல் குறித்து   காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதைத்தொடர்ந்து போலீசார் டேவிட்டிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement