மாலத்தீவு ஸ்கூபா டைவிங் திகில்.. 5 பேரின் உயிரை பறித்த சோகம்.!



Maldives Scuba Diving Tragedy: Five Italian Tourists Die During Underwater Cave Exploratio

இன்பசுற்றுலாவுடன் ஆராய்ச்சிக்கு வந்தவர்கள் மரணம் அடைந்தனர்.

ஸ்கூபா டைவிங்:

மாலத்தீவில் உள்ள வாவூ ஆட்டொலி பகுதியில் சுற்றுலா வந்திருந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் மாலத்தீவில் பிரபலமான ஸ்கூபா டைவிங் எனப்படும் நீருக்கடியில் நீந்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

இதையும் படிங்க: கட்டுமான வேலையில் 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.. 2வது மாடியில் காத்திருந்த எமன்.. தந்தை கண்முன் சோகம்.!

குகை ஆய்வு:

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு 30 மீட்டர் ஆழம் வரை நீந்தி செல்ல அனுமதி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால், இத்தாலி நாட்டைச் சேர்ந்த டைவர் குழு கல்லூரி பேராசிரியருடன் ஆய்வாளர்களாக வந்திருந்ததால் 50 மீட்டர் ஆழத்தில் இருக்கும் குகையை ஆய்வு செய்தனர்.

World news

பரிதாப மரணம்:

அப்போது, எதிர்பாராத விதமாக இவர்கள் ஐவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், மோசமான வானிலை காரணமாக இவர்கள் ஐவரின் உடலையும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர் மோனிகா, அவரின் மகள், 2 பிற உதவியாளர்கள் என மொத்தமாக ஐவர் பலியாகி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: #Breaking News: சாத்தூரில் சோகம்.. பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி.!