சராமாரி கத்திகுத்து.. வேலையை முடித்துவிட்டு வெளியில் வந்த செவிலியருக்கு கணவரால் நேர்ந்த கொடூரம்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா உலகம்

சராமாரி கத்திகுத்து.. வேலையை முடித்துவிட்டு வெளியில் வந்த செவிலியருக்கு கணவரால் நேர்ந்த கொடூரம்!

கேரளாவை சேர்ந்த மெரின் ஜாய்(26) என்ற பெண் செவிலியர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் கோரல் ஸ்பிரிங்ஸ் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் பெயர் பிலிப் மாத்யூ(34).

கடந்த செவ்வாய்க்கிழமை மெரின் மருத்துவமனையில் பணியை முடித்துவிட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது காரில் வந்த அவரது கணவர் மாத்யூ, மெரினை பிடித்து இழுத்து சராமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். 

படுகாயத்தால் மெரின் மயங்கி விழவே மாத்யூ அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். மெரின் பணியாற்றும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு இருந்தும் உயிருக்கு போராடிய அவரை சற்று தொலைவில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மெரின் உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமான அவரது கணவர் மாத்யூவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை தான் இதற்கு காரணம் என முதல் தர அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo