இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே! இலங்கையை ஆளும் ராஜபக்சே குடும்பம்!

இலங்கை பிரதமராகிறார் மகிந்த ராஜபக்சே! இலங்கையை ஆளும் ராஜபக்சே குடும்பம்!


mahinda rajapaksa becomes srilanka prime minister

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமர் ஆகிறார்.


இலங்கையில் சில தினங்களுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இவர் நேற்று முன்தினம் இலங்கையின் 7வது அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனையடுத்து இலங்கை பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே நியமனம் செய்யப்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

rajabakse

ராஜபக்சே குடும்பத்தில் ஒருவரான கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ராஜபக்சே குடும்பத்தில் மகிந்த ராஜபக்சே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.